Posts

Showing posts from December, 2017

நம் தலைமுறைக்கான சினிமா..அருவி

Image
நோய் பீடித்துள்ள ஒரு சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சமூகம் மீதான கோபம்,  ஆதங்கம்,  தன் அடிமனதில் தேங்கியிருந்த ஆசைகள், ஏக்கங்கள், கவலைகள், சந்தோசங்கள் என்று உணர்ச்சிகளை அருவியாகக் கொட்டியிருக்கும் திரைப்படம் அருவி.. தமிழ் சினிமாவில் நான் அறிந்தவரையில் எய்ட்ஸ் நோயாளிகளின் வலிகள், வாழ்வியல், அதற்கு பின் உள்ள அரசியல் பற்றி பேசியுள்ள முதல் திரைப்படம் அருவி.. உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டு பெற்ற திரைப்படம் என்று விளம்பரம் செய்யப்பட்டு ஏமாற்றாத திரைப்படம்.. ஒரு படைப்பு நமது சிந்தனைகளை சில காலமாவது ஆட்சி செய்ய வேண்டும்..நம்மை தூங்க விடாமல், உட்கார விடாமல், நடக்க விடாமல் பாடாய்ப்படுத்த வேண்டும்..அப்படியான ஒரு படைப்பு அருவி.. பொதுவாக சமூக கட்டுப்பாடுகள் என்று யாராவது பேச ஆரம்பித்தாலோ, எழுதியிருப்பதை படிக்க நேர்ந்தாலோ, அதைப்பற்றி பேசும் திரைப்படங்கள் என்றாலோ காந்தியின் குரங்கு பொம்மைகள் போல காது, வாய், கண் இவற்றை மூடிக்கொண்டுவிடுவது வழக்கம்..ஏனென்றால் பெரும்பாலும் ஃப்ரீ செக்ஸ்,  குடும்பக் கட்டமைப்பை சிதைத்தல், ஒழுக்கக்கேடான பழக்கங்களில் ஆணுக்கு இணையாக பெண்ணை ந

ஆற்றாமையின் ஆறாம் தேதி..!

Image
ஆற்றாமையின் அர்த்தமான ஆறாம் தேதி.. இருபத்தைத்தந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் இந்தியாவின் இறையாண்மை கடப்பாரைகளுக்கு இரையானது..! மதிலுடன் சேர்த்து மனிதமும் இடிக்கப்பட்டது.! வேற்றுமையில் ஒற்றுமை வேருடன் பிடுங்கியெறியப்பட்டது.! கதறலும்,கடப்பாறையின் சத்தமும் கலந்து கலங்கடித்து களியாட்டம் போட்டது! பாரதத்தாயிடம் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையின் வாயுடன் மாரும் சேர்த்து அறுக்கப்பட்டது! பெரும்பான்மையினரின் குரல் என்ற போர்வையில் சிறுபான்மையினரின் குரல்வளை நெறிக்கப்பட்டது! காந்தி மகானை வீழ்த்தியவர்கள் கண்ணியமான மசூதியையும் தகர்த்தனர்! கரசேவையின் பெயரில் நரசேவை நடந்தேறியது! இப்போது செய்யப்பட்ட அறுவடையின் முதல் விதை விதைக்கப்பட்டதும் அன்றுதான்! சுதந்திர இந்தியாவைக் கட்டமைக்க ஒரு செங்கல்லைக் கூட நகர்த்தாதவர்கள் சிந்தப்பட்ட இரத்தத்தை தங்கள் சிறுநீர் கொண்டு கழுவிய நாள்! தட்டிக் கேட்க வேண்டியவர்கள் எதனைக் கொண்டோ கட்டிப்போடப்பட்டனர்..! ஒரு தலைமுறையாய் அலைகிறோம் நீதி வேண்டி! நீதி வழங்க வேண்டியவர்கள் பாதி பாதியாக பிரித்து வழங்கினர் நம்பிக்கைய

அண்ணலாரை அறிவோம்..!

ஆறாம் நூற்றாண்டு..உலகின் மையப்பகுதியான அரேபிய தீபகற்பத்தில் ஒரு பகுதி தனித்து விடப்பட்டிருந்தது.அண்டை நாடுகளை வேட்டையாடி அடிமைப்படுத்துவதில் மும்முரமாக இருந்த ரோம, பாரசீகப் பேரரசுகள் கூட அந்தப் பகுதியைப் பற்றி சிந்தித்தது கிடையாது. காரணம் அங்கு வசித்த மக்களும், அவர்கள் வாழ்ந்த சூழலும்...அந்த நகரம் மக்கா...அந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக, கல்வியறிவற்றவர்களாக, நாகரீகம் என்றால் என்ன என்றே தெரியாதவர்களாக வாழ்ந்து வந்தனர். கொலை, கொள்ளை, மது, விபச்சாரம், நிர்வாண வழிபாடுகள், பரம்பரைச் சண்டைகள் என்று அவர்களது வாழ்வின் எல்லா நிலைகளிலும் தீமைகளும், அனாச்சாரங்களும் நிரம்பி வழிந்தன. ஆனால் வெறும் 23 ஆண்டுகளில் அம்மக்களை பண்பட்டவர்களாக, இன்றைய நாகரீக உலகிற்கு நாகரீகத்தின் அடிச்சுவட்டை கற்பிக்க்க் கூடியவர்களாக, உலகின் பெரும்பகுதியை ஆட்சி செய்யும் தகுதியுடையவர்களாக மாற்றிக்காட்டினார் ஒரு தனி மனிதர்! அவர்தான் இறைவனின் தூதர் முகம்மது நபி(ஸல்*) அவர்கள்.. தீமைகள் தலைவிரித்தாடிய அந்த கால கட்டத்திலும் முகம்மது(ஸல்) அவர்கள் தூய்மையானவராக, வாய்மையானவராக, நேர்மையானவராக திகழ்ந்தார்கள். “ நான் இன்று இத்தன