Posts

Showing posts from November, 2017

இந்திய கல்வித் துறையின் முன்னோடி ..!

Image
ந வம்பர் 11 – தேசிய கல்வி தினம். சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களது பிறந்த தினமே தேசிய கல்வி தினமாக அனுசரிக்கப்படுகின்றது. மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே வரலாற்றை திரித்து எழுதும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய சுதந்திரத்திலும், சுதந்திர இந்தியாவை கல்வியில் சிறந்த தேசமாக மாற்றுவதிலும் மெளலானாவின் பங்களிப்பை நாம் நமது எதிர்கால சந்ததிக்கு கடத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இளமைப்பருவம் : மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் இளமைக் காலங்களில் இருந்து இன்றைய மாணவ, இளைஞர்கள் படிக்க வேண்டிய பாடம் மிக அதிகம். இறைவனின் ஆலயம் அமைந்த மண்ணில், கல்வியிலும், அறிவிலும் சிறந்த ஒரு குடும்பத்தில் பிறந்த மெளலானா, சிறு வயது முதலே அறிவைத் தேடுவதிலும், தான் பெற்ற கல்வியை பிறருக்கு கற்பிப்பதிலும் நேரத்தை செலவழித்தார்கள். இளவயதிலேயே உருது, ஹிந்தி, பெர்சியன், பெங்காலி, அரபி, ஆங்கில மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்கள். அதோடல்லாமல் இஸ்லாமிய மார்க்கக் கல்வியிலும், கணிதம