Posts

Showing posts from June, 2017

சென்று வா..!

Image
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறவாது கண்மணியே..! இனியொரு முறை உனைப் பார்ப்பேனா தெரியவில்லை தனியறையிலும் உன் நினைவென்னை பிரியவில்லை.. குடல் பசித்தது ஆனால் புசிக்க மனமில்லை தாகம் தகித்தது தண்ணீர் குடிக்க மனமில்லை கண்கள் கிறங்கியது உள்ளம் உறங்கவில்லை.. கச்சை கட்டிக் கொண்டு இச்சை தவிர்த்தேன் உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறவாது கண்மணியே.. உன்னால் உடலில் பரவும் உஷ்ணமும் டிசம்பர் கால குளிராய் மாறியது.. உன்னோடு நடக்கையில் எட்டு வைக்கும் ஒவ்வொரு அடியும் நீ எனை விட்டுப் பிரிவாயோ எனும் அச்சம் மற்றெல்லா வற்றையும் ஆக்கியது துச்சம்.. காலை முதல் மாலை வரை உன்னுடன் இருந்தேன் மாலை வந்தால் மீண்டும் நீ வரும் நேரம் பார்த்திருந்தேன்.. உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறவாது கண்மணியே.. உன் விரல் கோர்த்து நடந்துவிட்டேன் மகிழ்ச்சியுடன் கடந்துவிட்டேன் விரலிடைகள் பிரிக்கினறாய் பிரிவிடைகள் கொடுக்கின்றாய் தொடும்பொழுது மறைகின்றாய் தொலைதூரம் செல்கின்றாய்.. நீ இல்லாத என்

இனியாவது ஒரு விதி செய்வோம்...!

Image
இனியாவது ஒரு விதி செய்வோம்...!  (சமரசம் 16-30,ஜூன் 2017 இதழில் பிரசுரமகியுள்ளது) விதிகளை சரியாக பின்பற்றாமல் கட்டப்பட்ட , சரியாக ஆய்வுகளை மேற்கொள்ளாமல் அனுமதி அளிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடம் முழுவதும் எரிந்து தரைமட்டமாகியுள்ளது . விபத்துக்குள்ளான இந்த கட்டிடத்தில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்று வந்துள்ளதை இவ்விபத்து வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அனுமதி வழங்கப்பட்டதை விட கூடுதல் தளங்களைக் கட்டியுள்ளனர் . தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குறுகலான சாலைகளில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது . இந்த விதிமீறல்களை அதிகார வர்க்கம் கண்டும் காணாமல் இருந்ததே இந்த கோரச் சம்பவத்திற்கு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ” வரும்முன் காப்பது சிறந்தது ” என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் நமது அரசுகளுக்கோ “ கெட்ட பின் புத்தி “ என்பதே தாரக மந்திரமாக உள்ளது. விதிமீறல்கள் பற்றி ஒவ்வொரு முறை நாம் பேசுவதற்கும் சில பல அப்பாவி உயிர்கள் காவு கொடுக்கப்பட வேண்டியுள்ளது தான் வேதனை . பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகள் பற்றி நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கும்பகோணத்தில் 91 பிஞ

ஏனென்றால்..!

Image
ஏனென்றால்... ============== கிரிக்கெட் உலகப் போரில் இந்தியா பாகிஸ்தானை விழ்த்தி வெற்றி வாகை சூடி விட்டது. நாடு முழுதும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கின்றது. பாகிஸ்தான் அனுதாபி பட்டாசை மீண்டும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டார். இனி என் தேசத்தில் வறுமை ஒழிந்து விடும். இந்நாட்டு மன்னர் யாவருக்கும் மூன்று வேளையும் வயிறு நிரம்ப உணவு கிடைத்து விடும். பட்டினி சாவுகள் இனி விழாது.  அறுவடையின் முழு பயனும் விதைத்தவனை சென்று சேர்ந்துவிடும். அவன் இனி தற்கொலை செய்துகொள்ள மாட்டான். குடிசைகள் கோபுரங்களாகி விடும். காலைக்கடனை கழிக்க ஒதுக்குபுறம் தேடும் இழிநிலை இனி இராது. தூங்கிக் கொண்டிருப்பவர்களை கடத்தவும் படுக்கையில் கிடத்தவும் துடிக்கும் ஈனப்பிறவிகளிடமிருந்து நடைமேடை வாழ்பவர்கள் விடுதலை அடைவர். ஊழலில் ஊறித் திளைத்துக் கொண்டிருக்கும் எம் தலைவர்கள் இனி கருமமே கண் என வாழ்வர். அரசு அலுவலகங்களில் இனி கொடுக்கும் கையோ வாங்கும் கையோ இருக்காது. கல்வி, சுகாதாரம் இலவசமாக அரசால் வழங்கப்பட்டுவிடும். தாய்மொழியில் தரமான அரசுக்கல்வி  எம் பிள்ளைகளுக்கு கிடைத

திராவிடத்தின் திராணி..!

Image
திராவிடத்தின் திராணி!  அறுபது வருடங்கள் அனுபவ நாயகனுக்கு அறுபது அடிகளில் ஒரு வாழ்த்து மடல்.. 1. அஞ்சுகத்தின் தவப்புதல்வன்! 2. தமிழ்தாயின் கடைப்புதல்வன்! 3. திருவாரூர் தந்த திருவருட்செல்வன். 4. கருப்பு திராவிடத்திற்கு தன் குருதியால் வண்ணம் வழங்கிய குருதிக் கொடையாளன்! 5. கல்லக்குடி கொண்ட கர்மவீரன்! 6. சமூக நீதி காத்திட வந்த சமர்வீரன்.. 7. ஒடுக்கப்பட்டோரின் போர்க்குரல்.. 8. அறிக்கைகளால் அரசியலை நிர்ணயித்தவன்.. 9. கடிதம் மூலம் கழகம் வளர்த்தவன் 10. வாயசைத்தவர்களுக்கு தன் வசனம் மூலம் வாழ்வளித்தவன்! 11. தோல்வி காணா சட்டமன்றம் கண்டவன்! 12. வைரவிழா காணும் வைராக்கியன்.. 13. எம்மொழியை செம்மொழியாக்கியவன்! 14. முத்தமிழின் மொத்த உருவம்! 15. தொல்காப்பிய உரை அமைத்து ஒல்காப்புகழ் பெற்றவன்! 16. சிலப்பதிகாரத்திற்கு சிறப்பதிகாரம் அமைத்தவன். 17. தமிழர் நல்வாழ்விறகு முரசொலித்தவன். 18. தமிழன்னைக்கு தன்னையே பரிசளித்தவன். 19. தமிழுக்காக தன்னையே மறந்தவன் 20. தமிழர்க்காக பதவியைத் துறந்தவன்.. 21. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி அழகு பார்த்தவன்.. 22. உழுதவனை வாழவைக்க உழவர் சந்தை அ