Posts

Showing posts from July, 2017

மூன்று மரணங்களும் மூன்று செய்திகளும்..!

Image
மரணம் உலகப்பொது நியதி. பிறக்கும் அனைவரும் ஒருநாள் இறக்கத்தான் போகின்றோம். தினமும் பல இறப்பு செய்திகள் நம்மைக் கடந்து செல்கின்றன. நாமும் பல இறப்புகளை கடந்து வருகின்றோம். எல்லா மரணங்களும் நம் நினைவில் நிற்பதில்லை. சில மரணங்கள் நம்முள் சில சலனங்களை ஏற்படுத்தலாம். சில மரணங்களை நாமே கூட விரும்புவதுண்டு. பொதுவாக மரணங்களுக்கான எதிர்வினைகள் சில நாட்கள் மட்டுமே. அதற்கு பிறகு நம்முடைய இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும் அல்லது திருப்பப்படுவோம். சில மரணங்கள் நம்மை கலங்க வைப்பதுடன் உறங்கவும் விடாமல் உலுக்கி எடுத்துவிடும். கண்கள் அருவியாக மாறிக் கண்ணீரை சுரந்த வண்ணம் இருக்கும். வெகு நாட்கள் நம் நினைவுகளையும் அன்றாட நிகழ்வுகளையும் ஆக்கிரமிக்கும். இன்றைய சூரியன் உதிக்காமல் இருந்திருக்கலாமோ என்று இயற்கையையும் மீறி நம்மை சிந்திக்க வைக்கும். அப்படிப்பட்ட மரணங்களால் சமுதாயத்தில் மாற்றங்கள் மலரும்; புரட்சிகள் வெடிக்கும்; புதிய கதவுகள் திறக்கும். கடந்த ஜூலை மாதம் அப்படிப்பட்ட மூன்று மரணங்களைக் கண்டுள்ளது. அந்த மூன்று மரணங்களும் மூன்று செய்திகளை, மாற்றத்திற்கான விதைகளை சமுதாயத்தில் விதைத்துச் சென்றுள்ளது. ஏன்

கான்டாக்ட்ஸ்..!

Image
சகுனி திரைப்படத்தில் ஜெயிலில் தன்னைப் பார்க்க வரும் சந்தானத்திடம் சிறைக்குள் கிடைத்த கோட்டா சீனீவாசராவ் தொடர்பை கார்த்தி இப்படி சொல்வார்..'கான்டாக்ட் ரஜினி..' கான்டாக்ட் (Contact) - தமிழில் தொடர்புகள், நமக்கு மிக அவசியமானது.. அண்ணாவிற்கு கிடைத்த Contact பெரியார்.. கலைஞர், எம்.ஜி.ஆருக்கு அண்ணா.. ஜெயலலிதாவிற்கு கிடைத்த Contact எம்ஜிஆர்.. சசிகலாவிற்கு கிடைத்த Contact ஜெயலலிதா .. சீமான், வைகோ, பழநெடுமாறன் இவர்களுக்கு கிடைத்த Contact பிரபாகரன்  😁 😁 .. சென்ற தேர்தலில் திருமா, விஜயகாந்த், காம்ரேடுகளுக்கு கிடைத்த Contact வைகோ 😂 😂 .. தொடர்புகள் நம்மை, நமது பாதையை புரட்டிப்போட்டுவிடக் கூடியவை..நல்ல வகையிலா அல்லது தீய வகையிலா என்பதை நாமும் நமது தொடர்புகளுமே தீர்மானிக்கவல்லவை.. ஊடகத்துறையில் இருக்க வேண்டும் என்பது சிறுவயது கனவு. ஆனந்த விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தில் இரண்டு முறை நேர்முகத் தேர்வு வரை சென்றிருக்கிறேன். ஆனால் காலத்தின் ஓட்டத்தில் பயணம் திசை மாறி இறைக்கருணையால் நல்ல வேலை கிடைத்து அதில் பயணிக்க ஆரம்பித்துவிட்டேன். சென்னைக்கு வந்த பிறக