Posts

Showing posts from September, 2017

விடியல் எப்போது?

Image
நமது  அண்டை நாடான மியான்மரில்(பர்மா) முஸ்லீம் மக்கள், கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். மியான்மர் முஸ்லீம்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் அவர்கள் ஆதிக்க சக்திகளால் வேட்டையாடப்பட்டதும், அகதிகளாக வங்காள தேசத்திலும், மலேசியாவிலும் குடியேறிய இரத்தம் தோய்ந்த வரலாறு உலகம் அறிந்ததே..ஏன், இந்தியாவிலும் கூட பல ஆயிரம் மியான்மர் முஸ்லீம்கள் அகதிகளாக குடியேறி, பின்பு இந்திய குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்த முறை அவர்கள் தாக்கப்படுவது அமைதிக்கும், துறவறத்திற்கும் பெயர் பெற்ற புத்த மதத்தைச் சார்ந்தவர்களால்..புத்தர் உயிருடன் இருந்திருந்தால், இப்படி ஒரு தீவிரவாதக் கூட்டத்தை உருவாக்கியதை எண்ணி வெட்கப்பட்டு, மீண்டும் போதிமரத்தைத் தேடி போயிருப்பார். அந்த அளவிற்கு பச்சிளங்குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள் என்று அவர்களின் பேயாட்டம் யாரையும் விட்டு வைக்கவில்லை.  அவர்களுடைய இந்த கொலைவெறியாட்டத்திற்கு அரசும், ராணுவமும் துணை நிற்பதுதான் சோகத்திலும் சோகம். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகியும், புத்த மதத்தலைவர் தலாய் லாமாவும் கூட முஸ்லீம்கள் மீதான இ

தற்கொலை தீர்வாகுமா ?

Image
செப்டம்பர் 10, உலக தற்கொலை தடுப்பு தினமாக உலகம் முழுவதிலும் அனுசரிக்கப்படுகின்றது. சமீப காலங்களில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கின்றார். தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை, கொலைகள் மற்றும் போர்களின் மூலம் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. உலகில் வாழும் 5 சதவிகிதம் பேர் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். பால், வயது, நாடுகள் பேதமின்றி தற்கொலை எண்ணம் வேகமாகப் பரவி வருகின்றது. குறிப்பாக இளைய சமுதாயத்தினர் (15 – 19 வயதிற்குட்பட்டவர்கள்) ஒரு இலட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்து கொள்கின்றனர். மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் தற்கொலை நடைபெறுகின்றது.  ஆய்வறிக்கையின்படி கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் தான் தன்னைத்தானே மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.