Posts

Showing posts from May, 2017

தேறுமா ஆறு மாதம்?

Image
தேறுமா ஆறு மாதம்? (இந்த கட்டுரை சமரசம் 16-18 பிப்ரவரி இதழில் பிரசுரமானது)             அரியணை ஏறி ஆறு மாதங்களை கடந்தாகிவிட்டது. முன்னெடுக்கப்பட்ட கோஷங்கள் எல்லாம் வெறும் முழக்கங்களாகவே முடங்கிவிட்டது. வளர்ச்சியின் நாயகனுக்கு ஓட்டு போட்டால் தங்கள் வாழ்வை வானளாவ உயர்த்தி விடுவார் என்று வாக்களித்த மக்கள் வாய்க்குள் விரலை வைத்துக் கொண்டுவிட்டனர். கருப்புப் பணத்தை கைப்பற்றி வழங்குவார் என்று எதிர்ப்பார்த்தவர்கள் தங்கள் இருப்புப் பணத்துக்கே மோசம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மடிகளில் கைகளை இறுக்கக் கட்டிக் கொண்டுள்ளனர். டீ கடையில் வேலை பார்த்தவர் நம் கவலைகளை நன்கு அறிவார் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் அவர் அதானி, அம்பானி என்று கோடீக்களின் கவலையை மட்டுமே கவனிக்கிறார் என்று வெம்பிக் கொண்டிருக்கின்றனர். பத்து வருடம் ஆகிவிட்டது. பக்குவப்பட்டிருப்ப(பா)ர் என்று பசலை கொண்டவர்கள் இன்று பரிவாரங்களின் ஆட்டம் பார்த்து பதறிப் போயுள்ளனர்.                 ஆட்சி காலத்தில் 10%ஐ முடித்துவிட்ட ஒரு அரசாங்கம் தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் அதே அளவையாவது நிறைவேற்றியுள்ளதா என்று ச

ஊர்கூடி உடைப்போம்..!

Image
ஊர்கூடி உடைப்போம்..! (இந்த கட்டுரை 23-05-2017 தினமணி நாளிதழில் நடுப்பக்க கட்டுரையாக பிரசுரமாகியுள்ளது.  படிக்க கட்டுரையின் முடிவில் சுட்டி உள்ளது) 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவுகள் வந்தாகிவிட்ட்து.. ஒரு வருடம்..இல்லை.. இரண்டு வருடங்கள்(11ம் வகுப்பிலேயே ஆரம்பித்து) பள்ளியில், தனிப் பயிற்சி வகுப்புகளில், கொஞ்சூண்டு வீட்டில் என்று மூச்சுத் திணற திணற படித்தவற்றை (புரிந்தவற்றை அல்ல!) நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்ட தேர்வறைத் தீவுகளில் கொட்டிவிட்டு மாணவர்கள் அடைந்திருந்த சிறிது நிம்மதியையும் இந்த முடிவுகள் காவு வாங்கியிருக்கும். அத்தோடு பெற்றோர்கள் தனது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பதில் நிம்மதியையும், தூக்கத்தையும் இழந்து தவித்துக் கொண்டிருப்பதையும் கண்கூடாகக் காணலாம்.  அவர்களது நிம்மதியை குலைப்பதற்கென்றே இந்த நேரத்திற்கெல்லாம் தனியார் கல்வி வியாபாரிகள் தங்கள் கடைகளைத் திறந்து வைத்து கூவிக் கொண்டிருப்பர். ஒவ்வொரு வியாபாரத்திற்கும் ஒரு பருவம் இருப்பது போல் நமது கல்விக் கடைகளில் வியாபாரம் ஜோராக நடப்பது மே-ஜூன் மாதங்களில். தனியார் பள்ளி, கல்லூரிகளில் LKG தொ