திராவிடத்தின் திராணி..!

திராவிடத்தின் திராணி!

 அறுபது வருடங்கள் அனுபவ நாயகனுக்கு அறுபது அடிகளில் ஒரு வாழ்த்து மடல்..

1. அஞ்சுகத்தின் தவப்புதல்வன்!
2. தமிழ்தாயின் கடைப்புதல்வன்!
3. திருவாரூர் தந்த திருவருட்செல்வன்.
4. கருப்பு திராவிடத்திற்கு தன் குருதியால் வண்ணம் வழங்கிய குருதிக் கொடையாளன்!
5. கல்லக்குடி கொண்ட கர்மவீரன்!
6. சமூக நீதி காத்திட வந்த சமர்வீரன்..
7. ஒடுக்கப்பட்டோரின் போர்க்குரல்..
8. அறிக்கைகளால் அரசியலை நிர்ணயித்தவன்..
9. கடிதம் மூலம் கழகம் வளர்த்தவன்
10. வாயசைத்தவர்களுக்கு தன் வசனம் மூலம் வாழ்வளித்தவன்!

11. தோல்வி காணா சட்டமன்றம் கண்டவன்!
12. வைரவிழா காணும் வைராக்கியன்..
13. எம்மொழியை செம்மொழியாக்கியவன்!
14. முத்தமிழின் மொத்த உருவம்!
15. தொல்காப்பிய உரை அமைத்து ஒல்காப்புகழ் பெற்றவன்!
16. சிலப்பதிகாரத்திற்கு சிறப்பதிகாரம் அமைத்தவன்.
17. தமிழர் நல்வாழ்விறகு முரசொலித்தவன்.
18. தமிழன்னைக்கு தன்னையே பரிசளித்தவன்.
19. தமிழுக்காக தன்னையே மறந்தவன்
20. தமிழர்க்காக பதவியைத் துறந்தவன்..

21. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி அழகு பார்த்தவன்..
22. உழுதவனை வாழவைக்க உழவர் சந்தை அமைத்தவன்!
23. அமர்ந்திருந்த வள்ளுவனை மக்கள் அண்ணாந்து பார்க்க வைத்தவன்!
24. மெட்ரோவிற்கு மெட்ரோ மூலம் மேன்மை வழங்கியவன்..
25. உயிர் காக்கும் காப்பீடு திட்டம் உருவாக்கியவன்..
26. அண்ணாவின் கனவை அரிசி மூலம் நனவாக்கியவன்
27. மதவாத சக்திகளின் வளர்ச்சியை பகல் கனவாக்கியவன்
28. எதிர்த்து நின்றவரையும் மதித்து நின்றவன்
29. மக்கள் மனதில் என்றும் அழியாத் தடம் பதித்து வென்றவன்.
30. கடைக்கோடி தொண்டனுக்கும் கண்ணியம் அளித்தவன்.

31. அடுக்கு மொழியின் அகராதி.
32. சிலேடை சிற்பி..
33. நாவன்மை மிக்க நாவலர்.
34. சிறுபான்மையினரின் காவலர்..
35. வீழ்த்த நினைத்த பருந்துகளை தன் இலையில் விருந்தாக்கியவன்.
36. 'பராசக்தி' படைத்தவன்!
37. ஒன்பது பத்துகளை கடந்த பின்னும் முதல் பத்தினைப் போல் உழைப்பவன்!
38. சமத்துவம் காத்திட சமத்துவபுரம் கண்டவன்!
39. அறிவுச் சுரங்கமாம் அண்ணா நூற்றாண்டு நூலகம் தந்தவன்!
40. கைவண்டியை ஒழித்து கண்ணியம் காத்தவன்..

41. உழுதவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் அளித்தவன்
42. கட்ட இயலா விவசாயக் கடன்களை கழித்தவன்.
43. இவரில்லாமல் அறுபதாண்டு கால அரசியல் இல்லை..
44. அரசியல் இல்லாமல் இவர் இல்லை!
45. பெரியாருக்கு பிரியமானவன்.
46. அண்ணாவின் அன்புத் தம்பி,
47. தம்பிகளின் பாசத் தலைவன்!
48. உதய சூரியனை இதயமாகக் கொண்டவன்.
49. நெருக்கடியை எதிர்த்து நெருப்பாய் கனன்றவன்.
50. அரசியல் நெருக்கடிகளை சிறப்பாய் வென்றவன்.

51. மாநில சுயாட்சியை நானிலம் எங்கும் முழங்கியவன்.
52. மனிதராய் வாழும் உரிமையை திருநங்கையர்க்கு வழங்கியவன்.
53. தலைகுனிந்த உன் பேனாவின் கருமை..
54. தலை நிமிர்ந்த்து தமிழன்னையின் பெருமை..
55. திராவிடத்தின் திராணி நீ!
56. அனுபவத்தில் உன் வைர விழாவைக் காணப் போகிறது இவ் வையம்..
57. அகவையில் நீ சதய விழா காண்பதில் இல்லை ஐயம்..
58. அன்றும் அரசியலில் நீதான் மையம்..
59. உங்களைத் தூற்றுபவர் தூற்றட்டும் அறியா சனம்!
60. மீண்டும் ஒருமுறை நீங்கள் அமர காத்திருக்கிறது அரியாசனம்!

வாழ்க நீவிர் பல்லாண்டு!

அபுல் ஹசன்

#HBDKalaignar94

Comments

Popular posts from this blog

சென்று வா..!

இந்திய கல்வித் துறையின் முன்னோடி ..!

முரண் அரசும் பெரும்பான்மை அமைதியும்..!