Posts

முரண் அரசும் பெரும்பான்மை அமைதியும்..!

ஒரு குறிப்பிட்ட மதத்தினரை நேரடியாக தாக்கும் அத்தனை அயோக்கியத்தனங்களையும் அதிகாரத் திமிரில் அரங்கேற்றம் செய்து வரும் ஆட்சியாளர்கள்..அப்படி அவர்கள் செய்யும் அராஜகங்களை பெரும்பான்மை மக்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றார்கள்..நிதர்சனத்தில் பெரும்பான்மை மக்களை அவர்களையும் அறியாமல் இந்த நடவடிக்கைகள் எல்லாம் நியாயம்தான் என்ற மன மாயையில் சிக்க வைத்துவிட்டு தங்கள் செயல்திட்டங்களை மிக அழகாக நடைமுறைப்படுத்துகின்றனர் என்பதுதான் உண்மை ..! ஒருபுறம் முஸ்லிம்களை மீட்டெடுக்கிறேன் பேர்வழி என்று நடவடிக்கைகள் எடுத்துவிட்டு, இன்னொரு பக்கம் அதற்கு முரணான காரியங்களில் ஈடுபட்டுவருகின்றது இந்த சர்வாதிகார அரசாங்கம்.. முஸ்லிம்கள், தலித்களின் உணவு, வியாபார உரிமையில் நேரடியாக கை வைத்த மாட்டிறைச்சி தடை சட்டத்தை பசு பாதுகாப்பு என்ற பெயரில் கொண்டு வந்தனர்..ஆனால் அந்த மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வேலையை ஆத்மசுத்தியுடன் செய்தனர்.. முஸ்லிம்கள் உடனடியாக விவாகரத்து செய்யும் முறை பெண்களை பாதிப்பதாக கதறி, கண்ணீர் விட்டு அதனை தடை செய்து சட்டம் இயற்றினார்கள்..அதே நேரத்தில் இந்து திருமண சட்டப்படி வ

நம் தலைமுறைக்கான சினிமா..அருவி

Image
நோய் பீடித்துள்ள ஒரு சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சமூகம் மீதான கோபம்,  ஆதங்கம்,  தன் அடிமனதில் தேங்கியிருந்த ஆசைகள், ஏக்கங்கள், கவலைகள், சந்தோசங்கள் என்று உணர்ச்சிகளை அருவியாகக் கொட்டியிருக்கும் திரைப்படம் அருவி.. தமிழ் சினிமாவில் நான் அறிந்தவரையில் எய்ட்ஸ் நோயாளிகளின் வலிகள், வாழ்வியல், அதற்கு பின் உள்ள அரசியல் பற்றி பேசியுள்ள முதல் திரைப்படம் அருவி.. உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டு பெற்ற திரைப்படம் என்று விளம்பரம் செய்யப்பட்டு ஏமாற்றாத திரைப்படம்.. ஒரு படைப்பு நமது சிந்தனைகளை சில காலமாவது ஆட்சி செய்ய வேண்டும்..நம்மை தூங்க விடாமல், உட்கார விடாமல், நடக்க விடாமல் பாடாய்ப்படுத்த வேண்டும்..அப்படியான ஒரு படைப்பு அருவி.. பொதுவாக சமூக கட்டுப்பாடுகள் என்று யாராவது பேச ஆரம்பித்தாலோ, எழுதியிருப்பதை படிக்க நேர்ந்தாலோ, அதைப்பற்றி பேசும் திரைப்படங்கள் என்றாலோ காந்தியின் குரங்கு பொம்மைகள் போல காது, வாய், கண் இவற்றை மூடிக்கொண்டுவிடுவது வழக்கம்..ஏனென்றால் பெரும்பாலும் ஃப்ரீ செக்ஸ்,  குடும்பக் கட்டமைப்பை சிதைத்தல், ஒழுக்கக்கேடான பழக்கங்களில் ஆணுக்கு இணையாக பெண்ணை ந

ஆற்றாமையின் ஆறாம் தேதி..!

Image
ஆற்றாமையின் அர்த்தமான ஆறாம் தேதி.. இருபத்தைத்தந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் இந்தியாவின் இறையாண்மை கடப்பாரைகளுக்கு இரையானது..! மதிலுடன் சேர்த்து மனிதமும் இடிக்கப்பட்டது.! வேற்றுமையில் ஒற்றுமை வேருடன் பிடுங்கியெறியப்பட்டது.! கதறலும்,கடப்பாறையின் சத்தமும் கலந்து கலங்கடித்து களியாட்டம் போட்டது! பாரதத்தாயிடம் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையின் வாயுடன் மாரும் சேர்த்து அறுக்கப்பட்டது! பெரும்பான்மையினரின் குரல் என்ற போர்வையில் சிறுபான்மையினரின் குரல்வளை நெறிக்கப்பட்டது! காந்தி மகானை வீழ்த்தியவர்கள் கண்ணியமான மசூதியையும் தகர்த்தனர்! கரசேவையின் பெயரில் நரசேவை நடந்தேறியது! இப்போது செய்யப்பட்ட அறுவடையின் முதல் விதை விதைக்கப்பட்டதும் அன்றுதான்! சுதந்திர இந்தியாவைக் கட்டமைக்க ஒரு செங்கல்லைக் கூட நகர்த்தாதவர்கள் சிந்தப்பட்ட இரத்தத்தை தங்கள் சிறுநீர் கொண்டு கழுவிய நாள்! தட்டிக் கேட்க வேண்டியவர்கள் எதனைக் கொண்டோ கட்டிப்போடப்பட்டனர்..! ஒரு தலைமுறையாய் அலைகிறோம் நீதி வேண்டி! நீதி வழங்க வேண்டியவர்கள் பாதி பாதியாக பிரித்து வழங்கினர் நம்பிக்கைய

அண்ணலாரை அறிவோம்..!

ஆறாம் நூற்றாண்டு..உலகின் மையப்பகுதியான அரேபிய தீபகற்பத்தில் ஒரு பகுதி தனித்து விடப்பட்டிருந்தது.அண்டை நாடுகளை வேட்டையாடி அடிமைப்படுத்துவதில் மும்முரமாக இருந்த ரோம, பாரசீகப் பேரரசுகள் கூட அந்தப் பகுதியைப் பற்றி சிந்தித்தது கிடையாது. காரணம் அங்கு வசித்த மக்களும், அவர்கள் வாழ்ந்த சூழலும்...அந்த நகரம் மக்கா...அந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக, கல்வியறிவற்றவர்களாக, நாகரீகம் என்றால் என்ன என்றே தெரியாதவர்களாக வாழ்ந்து வந்தனர். கொலை, கொள்ளை, மது, விபச்சாரம், நிர்வாண வழிபாடுகள், பரம்பரைச் சண்டைகள் என்று அவர்களது வாழ்வின் எல்லா நிலைகளிலும் தீமைகளும், அனாச்சாரங்களும் நிரம்பி வழிந்தன. ஆனால் வெறும் 23 ஆண்டுகளில் அம்மக்களை பண்பட்டவர்களாக, இன்றைய நாகரீக உலகிற்கு நாகரீகத்தின் அடிச்சுவட்டை கற்பிக்க்க் கூடியவர்களாக, உலகின் பெரும்பகுதியை ஆட்சி செய்யும் தகுதியுடையவர்களாக மாற்றிக்காட்டினார் ஒரு தனி மனிதர்! அவர்தான் இறைவனின் தூதர் முகம்மது நபி(ஸல்*) அவர்கள்.. தீமைகள் தலைவிரித்தாடிய அந்த கால கட்டத்திலும் முகம்மது(ஸல்) அவர்கள் தூய்மையானவராக, வாய்மையானவராக, நேர்மையானவராக திகழ்ந்தார்கள். “ நான் இன்று இத்தன

இந்திய கல்வித் துறையின் முன்னோடி ..!

Image
ந வம்பர் 11 – தேசிய கல்வி தினம். சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களது பிறந்த தினமே தேசிய கல்வி தினமாக அனுசரிக்கப்படுகின்றது. மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே வரலாற்றை திரித்து எழுதும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய சுதந்திரத்திலும், சுதந்திர இந்தியாவை கல்வியில் சிறந்த தேசமாக மாற்றுவதிலும் மெளலானாவின் பங்களிப்பை நாம் நமது எதிர்கால சந்ததிக்கு கடத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இளமைப்பருவம் : மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் இளமைக் காலங்களில் இருந்து இன்றைய மாணவ, இளைஞர்கள் படிக்க வேண்டிய பாடம் மிக அதிகம். இறைவனின் ஆலயம் அமைந்த மண்ணில், கல்வியிலும், அறிவிலும் சிறந்த ஒரு குடும்பத்தில் பிறந்த மெளலானா, சிறு வயது முதலே அறிவைத் தேடுவதிலும், தான் பெற்ற கல்வியை பிறருக்கு கற்பிப்பதிலும் நேரத்தை செலவழித்தார்கள். இளவயதிலேயே உருது, ஹிந்தி, பெர்சியன், பெங்காலி, அரபி, ஆங்கில மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்கள். அதோடல்லாமல் இஸ்லாமிய மார்க்கக் கல்வியிலும், கணிதம

One stop post : மெர்சல்.!

Image
முன்குறிப்பு : எதையும் தீவிரமாக ஆதரிப்பதும், எதிர்ப்பதும் சரியல்ல என்பதே எனது நிலைப்பாடு. இந்த பதிவு நடப்பு சூழலைக் குறித்த ஒரு பார்வை அவ்வளவு தான்..யாரும் யோக்கியர்கள் என்று ஒரேயடியாக சான்றிதழ் வழங்குவதற்கல்ல.. எந்த தொலைக்காட்சி நிகழ்வை விமர்சித்தார்களோ அதே தொலைக்காட்சி நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட கவண் குழுவினர் நம் நினைவில் உள்ளனர். இதே படக்குழு நாளை எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் பேசலாம்..ஏனென்றால் இது ஒரு வியாபாரம்..விற்பனை தடைபட்டதென்றால் இறங்கிவர தயங்கமாட்டார்கள் என்பதை கூறிக்கொண்டு..! கவனிக்கப்படாத ப்ரச்னை.. GST, Digital india பற்றி எரிய ஆரம்பித்துவிட்ட நிலையில் மெர்சல் திரைப்படத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் தனியார் மருத்துவமனைகளுடன் டை அப் வைத்துக்கொண்டு காசு பார்ப்பதாக வருகிறது..இதனை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை..ஆனால் உண்மையில் இந்த மோசடி பரவலாக அரங்கேறி வருகிறது..எனது மச்சான் சமீபத்தில் திருச்சியில் நடைபெறும் இந்த ஆம்புலன்ஸ் மோசடி பற்றி கூறியிருந்தார்.. உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் சில ஆம்புலன்

தாமிரா, ஏஆர் ரஹ்மான் - நமக்கான செய்தி..

அண்மையில் சினிமாத் துறையில் நிகழ்ந்த முரண்பட்ட இரு நிகழ்வுகள் இஸ்லாத்தை மீண்டும் பேசுபொருளாக ஆக்கிவிட்டுள்ளன. ஒன்று இஸ்லாத்தின் மேன்மை பற்றியது. அது, ஊடகங்களோடு ஓரளவு தொடர்புடைய முஸ்லிம்களை மகிழச் செய்தது. ஆனால் வழக்கம் போல் முஸ்லிம்களால் மட்டுமே மெச்சப்படுவதாக, பொதுவெளியில் அவ்வளவாக அறியப்படாமல் கடந்து செல்லப்பட்ட  மெஹர் . மற்றொன்று, இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறியுள்ள சிறுமை. நம்மை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவும் வழக்கம்போல் ஒட்டுமொத்த தேசத்தாலும் பெரும்பான்மை ஊடகங்களாலும் அறிவுஜீவிகளாலும் இஸ்லாத்திற்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. இஸ்லாத்திற்கு சாதகமான செய்தி என்றால் கள்ளமெளனத்தில் உறைந்துபோவதும், பாதகமான விசயம் என்றால் லவுட்ஸ்பீக்கராக மாறுவதும் மதச்சார்பற்ற, நடுவுநிலை சமுதாயத்தின் பொதுப்புத்தியில் பசுமரத்தாணியாகப் பொறிக்கப்பட்டுவிட்டது. மெஹர், தாமிரா, நாம் எழுத்தாளர் பிரபஞ்சன் கதைக்கு இயக்குனர் தாமிரா திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியுள்ள மெஹர் என்ற சித்திரத்தை விஜய் தொலைக்காட்சி தயாரித்து ஒளிபரப்பியது. இஸ்லாமிய வாழ்வியலை, திருமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வையினை